அமெரிக்காவில் இந்தியர்கள் இனி கிரீன் கார்டு பெறுவது எளிது! பிரதிநிதிகள் சபையில் மசோதா நிறைவேற்றம்

Report Print Kabilan in அமெரிக்கா

அமெரிக்காவில் பிரதிநிதிகள் சபையில் கிரீன் கார்டு தொடர்பான மசோதா நிறைவேறியுள்ளது.

ஒரு நிதியாண்டில் வெளிநாட்டு மக்களில் 7 சதவிதம் பேருக்கு மட்டுமே குடியுரிமை வழங்க முடியும் என்று அமெரிக்காவில் முடிவெடுக்கப்பட்டதால், அங்கு வசிக்கும் ஐ.டி நிறுவன ஊழியர்களுக்கு கிரீன் கார்டு வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

அத்துடன் கிரீன் கார்டு பெறுவதற்கான காலம் அதிகரித்தது. இந்நிலையில், இந்தியர்கள் கிரீன் கார்டு பெறுவதில் இருக்கும் சிக்கலை தீர்க்கும் வகையில், பிரதிநிதிகள் சபையில் மசோதா ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த மசோதாவில், ஏற்கனவே இருந்த 7 சதவிதம் என்ற விதியை மாற்றி 15 சதவிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 435 பேர் கொண்ட பிரதிநிதிகள் சபையில், 356 எம்.பிக்கள் இந்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இதனைத் தொடர்ந்து, அமெரிக்காவின் செனட் சபைக்கு இந்த மசோதா அனுப்பி வைக்கப்படும். அங்கும் இந்த மசோதா நிறைவேறினால், ஜனாதிபதி டிரம்பின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். அவர் ஒப்புதல் அளித்தால் இது சட்டமாகும்.

அவ்வாறு நடக்கும் பட்சத்தில், ஹெச்1பி விசா வைத்துள்ள இந்தியர்களுக்கு இது சாதகமாக அமையும். அத்துடன் இந்தியர்கள் கிரீன் கார்டு பெறுவது சுலபமாகும். இந்நிலையில், 2020ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இச்சட்டம் நிறைவேற வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கருதப்படுகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers