அமெரிக்காவில் காணாமல் போன நபர்.. தனது செல்லப்பிராணிகளால் நேர்ந்த பரிதாபம்! அதிர வைக்கும் பின்னணி

Report Print Kabilan in அமெரிக்கா

அமெரிக்காவில் காணாமல் போன ஒருவர், தனது செல்லப் பிராணிகளால் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர் பிரெடி மேக்(57). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் காணாமல் போனார். அதனைத் தொடர்ந்து அவரது நண்பர்கள் பொலிசாருக்கு இதுதொடர்பாக தகவல் கொடுத்துள்ளனர்.

உடனே நடவடிக்கை மேற்கொண்ட பொலிசார், மேக்கின் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் சமூக வலைதளங்களின் வாயிலாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஆனால், சில மாதங்களாகவே அவரை தேடும் பணி தொடர்ந்தது.

இந்நிலையில், வீனஸ் எனும் பகுதிக்கு வேறொரு வழக்கு தொடர்பாக விசாரிக்க சென்ற பொலிசார், மனிதனின் எலும்புத்துண்டுகள் மற்றும் கிழிந்த ஆடைகளை கைப்பற்றினர். அவற்றில் சில எலும்புத் துண்டுகளில் நாயின் முடி மற்றும் தடங்கள் இருந்துள்ளன.

இதனால் சந்தேகமடைந்த பொலிசார், மீட்கப்பட்ட எலும்புத்துண்டுகள் குறித்து விசாரிக்க தொடங்கினர். இந்த விசாரணையில் காணாமல் போன மேக்கின் உடல் தான் அது என்பது தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து பொலிசார் விசாரணையை துரிதப்படுத்திய போது, வீனஸ் பகுதிக்கு அருகே உள்ள சிறிய கிராமப்புற வீட்டில் மேக் வசித்து வந்துள்ளார் என்பதும், அவர் 18 நாய்களை தனது செல்லப்பிராணிகளாக வளர்த்து வந்துள்ளார் என்பதும் தெரிய வந்தது.

நாய்களுடன் எப்போது விளையாடுவது, உரையாடுவது என அவற்றுடனே மேக் தனது பொழுதை கழித்து வந்துள்ளார். குடும்பத்தினரை விடவும் செல்லப்பிராணிகளுடனே அவர் நேரம் செலவழித்துள்ளார். இந்நிலையில் தான், அவர் வளர்த்த நாய்களே மேக்கை கடித்துத் தின்றே கொன்றுள்ளன என்பது தெரிய வந்துள்ளது.

மேக்கின் சடலம் கிடைத்த இடத்திற்கு அருகே மேக்கின் 13 நாய்கள் வெறிபிடித்த நிலையில் சுற்றித்திரிந்துள்ளன. அவை 2 நாய்களை கொன்றுள்ளது தெரிய வந்ததைத் தொடர்ந்து, வெறிபிடித்ததால் குறித்த 13 நாய்களும் கொல்லப்பட்டன. மேலும் 3 நாய்கள் இயல்பான நிலையில் இருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers