நடுவானில் செயலிழந்த விமானத்தின் இயந்திரம்.. பீதியில் கதறிய பயணிகளின் வீடியோ

Report Print Basu in அமெரிக்கா
383Shares

அமெரிக்காவில் நடுவானில் பறந்துக்கொண்டிருந்த பயணிகள் விமானத்தின் இயந்திரம் ஒன்று செயலிழந்ததால் பயணிகள் பீதியடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் உள்ளுர் நகரங்களான அட்லாண்டாவில் இருந்து பால்டிமோர் பயணித்த டெல்டா ஏர்லைன்ஸ நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானத்திலே இச்சம்பவம் ஏற்பட்டுள்ளது.

32 ஆண்டுகள் பழமையான விமானத்தில் 148 பயணிகள் பயணித்துள்ளனர். விமான் 10,000 அடி உயரத்தில் பறந்துக்கொண்டிருந்த போது திடீரென வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து, விமானத்திற்குள் புகை வர தொடங்கியுள்ளது.

மேலும். விமானத்தின் ஒரு பக்கம் உள்ள இயந்திரத்தில் ஸ்பின்னர் உடைந்து சிக்கிக்கொண்டதால் இயந்திரம் செயலிழந்துள்ளது. இதைக்கண்டு பயணிகள் பீதியடைந்து அலறியுள்ளனர். உடனே சிறப்பாக செயல்பட்ட விமானக்குழுவினர், பயணிகளின் பயத்தை போக்கியுள்ளனர்.

இதனையடுத்த, ஒரு இயந்திரன் உதவியுடன் விமானம் வட கரோலினாவில் உள்ள ராலே-டர்ஹாம் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. விமானத்தில் பயணித்த 148 பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டு மாற்று விமானத்தில் பால்டிமோர் அனுப்பி வைக்கப்பட்டதாக டெல்டா நிறுவனம் தரப்பில் தெரவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்