கூடுதல் வரி விதிக்கிற நாடாக இந்தியா இருப்பதை இனியும் ஏற்றுக்கொள்ள முடியாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார்.
அமெரிக்காவின் முன்னுரிமை வர்த்தக நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியாவை சமீபத்தில் டிரம்ப் நீக்கினார். இதற்கு காரணம், அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா கூடுதல் வரி விதிப்பதாக அவர் கூறினார்.
ஜப்பானின் ஒசாகா நகரில் நடந்த ஜி20 உச்சி மாநாட்டின்போது இந்திய பிரதமர் மோடியை சந்தித்து பேசினார் டிரம்ப். அப்போது அமெரிக்கா-இந்தியா இடையேயான வர்த்தக அமைச்சர்கள் சந்தித்து பேசுவது என முடிவானது.

இந்நிலையில், கூடுதல் வரி விதிப்பதாக மீண்டும் இந்தியா மீது டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில்,
‘அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கிற நாடாக இந்தியா நீண்ட காலமாக உள்ளது. இதை இனியும் ஏற்றுக்கொள்ள முடியாது’ என தெரிவித்துள்ளார்.
India has long had a field day putting Tariffs on American products. No longer acceptable!
— Donald J. Trump (@realDonaldTrump) July 9, 2019