அவர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்படுவார்கள்! டிரம்ப் அதிரடி அறிவிப்பு

Report Print Kabilan in அமெரிக்கா

சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் அமெரிக்காவில் இருந்து உடனடியாக வெளியேற்றப்படுவார்கள் என்று ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறுபவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் ஜனாதிபதி டிரம்ப் தீவிரமாக உள்ளார். குறிப்பாக, மெக்சிகோவில் இருந்து சட்ட விரோதமாக நுழைபவர்களை தடுப்பதற்காக சுவர் ஒன்றை எழுப்ப டிரம்ப் திட்டமிட்டார்.

அதற்காக அவர் நிதி கோரிய நிலையில், சுவர் எழுப்புவதற்கான நிதியை வழங்க அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கையை விரைவில் தொடங்க இருப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘போதை மருந்து கடத்தல்காரர்கள் என சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர், அமெரிக்காவில் நுழைந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்படுவார்கள்.

பல்லாண்டு காலமாக சட்ட விரோதமாக குடியேறிய மக்களைத் தான் நாங்கள் அகற்றுகிறோம்’ என தெரிவித்துள்ளார். ஆனால் புலம் பெயர்ந்தோர் உரிமை குழுக்கள் டிரம்பின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

Mark Wilson/Getty Images

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்