மூன்றே மாதங்களில் 12 மில்லியன் நிதி.. அமெரிக்காவில் மிரட்டும் தமிழகத்தைச் சேர்ந்த கமலா ஹாரிஸ்!

Report Print Kabilan in அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்காக கமலா ஹாரிஸ், 3 மாதங்களில் 12 மில்லியன் டொலர்கள் நிதி திரட்டியுள்ளார்.

2020ஆம் ஆண்டில் அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. இந்தத் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் போட்டியிடும் நிலையில், அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி வேட்பாளராக பலர் போட்டியிட உள்ளனர்.

குறிப்பாக, தமிழகத்தின் சென்னையை பூர்வீகமாகக் கொண்ட ஷாயமளா என்பவரின் மகளும், செனட் சபை அமைச்சருமான கமலா ஹாரிஸும்(54) போட்டியிட உள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக நிதி திரட்டும் பணியில் பலரும் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், கமலா ஹாரிஸ் 3 மாதங்களில் மட்டும் 12 மில்லியன் டொலர்கள்(சுமார் ரூ. 84 கோடி) நிதி திரட்டியுள்ளார்.

NOAH BERGER / AFP

அத்துடன் நிதி திரட்டும் பணியில் மேலும் தீவிரமாக ஈடுபட்டுள்ள கமலா ஹாரிஸ், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால், அமெரிக்க ஜனாதிபதி பதவியில் அமரும் முதல் இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமையைப் பெறுவார்.

ஜோ பிடென் (21.5 மில்லியன் டொலர்), பெர்னி சாண்டர்ஸ் (18 மில்லியன் டொலர்) ஆகியோர் கமலா ஹாரிஸை விட அதிகளவு நிதியை திரட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்