217 பேருடன் லண்டன் சென்ற விமானம்.. நடுவானில் தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு: விசாரணையில் திடுக்

Report Print Basu in அமெரிக்கா

அமெரிக்காவில் இருந்து பிரித்தானியா தலைநகர் லண்டனுக்கு பயணித்த விமானத்தில் திடீரென தீ பிடித்ததால், பாஸ்டனில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

வர்ஜின் அட்லாண்டிக் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம், 217 பயணிகளுடன் அமெரிக்காவின் நியூ யார்க் நகரத்திலிருந்து பிரித்தானியா தலைநகர் லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்திற்கு பயணித்துள்ளது.

நடுவானில் பயணித்துக்கொண்டிருந்த போது, விமானத்தில் தீ பிடித்துள்ளது, இதை விமானக் குழுவினர் கண்டறிந்த நிலையில்,விமானம் பாஸ்டன் விமான நிலையில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பயணிகள் அனைவரும் பத்திரமாக விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதில், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொலைபேசி சார்ஜரால் பயணிகள் இருக்கையில் தீ பிடித்து பரவியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும், விபத்து குறித்து மாசசூசெட்ஸ் மாகாண பொலிசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers