பாரிய தீ விபத்தில் சிக்கிய மூதாட்டி: உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய இளைஞர்கள்

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவில் கடுமையான தீ விபத்தில் சிக்கிய 90 வயது மூதாட்டியை நான்கு இளைஞர்கள் சேர்ந்து காப்பற்றியுள்ள சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவில் கடந்த மாதம், டிலான் விக், சேத் பைர்ட், நிக் பைர்ட் மற்றும் வியாட் ஹால் என்கிற 14 முதல் 17 வயதுக்குட்பட்ட நான்கு இளைஞர்கள் துல்சாவுக்கு வெளியே சபுல்பாவில் உள்ள ஹால் வீட்டில் ஒன்றாக மாலை பொழுதை கழித்துக்கொண்டிருந்தனர்.

முதலில் ரப்பர் வாசனையை உணர்ந்த அவர்கள் பக்கத்து வீட்டை சேர்ந்த கேத்தரின் ரிச்சியின் வீட்டில் இருந்து தீ பிழம்புகள் வெளியாவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

உடனே அவர்களில் இருவர் வீட்டிற்குள் நுழைந்தனர், மற்ற இருவர் ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தனர். அந்த சமயத்தில் தன்னுடைய படுக்கைக்கு சென்ற ரிச்சி வீட்டில் தீ பிடித்திருப்பதை கவனித்துள்ளார்.

அங்கு அதிகமான புகை மூட்டம் இருந்ததால், தப்ப முடியாமல் திணறிக்கொண்டிருந்துள்ளார். அப்பொழுது வீட்டிற்குள் நுழைந்த நிக் பைர்ட், ரிச்சி மற்றும் அவருடைய மகனை பத்திரமாக மீட்டு வெளியில் கொண்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில் ரிச்சியின் மகள் தன்னுடைய வலைப்பக்கத்தில், நான்கு இளைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். உங்களுடைய உயிரை பெரிதென நினைக்காமல் அதனை விட மற்றவரின் உயிரை பெரிதாக நினைத்துள்ளீர்கள் என பெருமைப்படுத்தியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers