அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: வெளியான வீடியோ காட்சி

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 20 வருடங்களுக்கு பின்னர் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மொஜாவே பாலைவனத்தில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கமானது தெற்கு கலிபோர்னியாவின் பெரும்பான்மனையான பகுதிகளை தாக்கியுள்ளது. அண்டை நாடான நெவாடாவிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸுக்கு வடகிழக்கில் 150 மைல் (240 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள கலிபோர்னியாவின் ரிட்ஜெக்ரெஸ்ட் நகருக்கு அருகே உள்ளூர் நேரப்படி காலை 10.30 மணியளவில் 6.6 என்ற அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

பின்னர் 6.4 என ரிக்டர் அளவில் பதிவாகியிருப்பதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வின் ஆராய்ச்சி இயற்பியலாளர் வில்லியம் யெக் தெரிவித்துள்ளார். மொஜாவே பாலைவனத்தின் தொலைதூரப் பகுதியில் கடந்த 1999 ஆம் ஆண்டில் ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்கு பின் மிகப்பெரிய நிலநடுக்கம் இதுவாகும்..

குறைந்தது 159 பின்னடைவுகள் இன்று பதிவு செய்யப்பட்டுள்ளன. பூகம்பம் அப்பகுதி முழுவதும் சிதறிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. 28,000 குடியிருப்பாளர்கள் வசிக்கும் தற்போது நகரத்தில் மின் தடை ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கவியலாளர் டாக்டர் லூசி ஜோன்ஸ், அடுத்த வாரத்தில் மற்றொரு பெரிய நிலநடுக்கத்திற்கு 50% வாய்ப்பு உள்ளது என்றார். அடுத்த சில நாட்களுக்குள் ஒரு பெரிய பூகம்பம் ஏற்பட 20 க்கு 1 வாய்ப்பு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் பெண் ஒருவர் நிலநடுக்கத்தால் சீர்குலைந்திருக்கும் கடையினை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்