கணவரை பழிவாங்க மனைவி செய்த மோசமான செயல்.. செல்போனில் இருந்த அசிங்கம்

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் கணவரை பழிவாங்க அவர் செல்போனில் சிறார்களின் ஆபாச புகைப்படங்களை பதிவேற்றிய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செரி ரினி போல்டன் (34) என்ற பெண் தனது கணவருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் பொலிசுக்கு போன் செய்த ரினி தனது கணவர் செல்போனில் சிறார்களின் ஆபாச புகைப்படங்கள் நிறைய உள்ளதாகவும், அவர் பலரை துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் கூறினார்.

இதை தொடர்ந்து பொலிசார் ரினி கணவரை கைது செய்யும் நோக்கில் அவர் வீட்டுக்கு வந்து அவர் செல்போனை ஆராய்ந்ததில் போனில் அதிகளவு ஆபாச புகைப்படங்கள் இருந்தது.

அப்போது மனைவி தன்னை பழிவாங்க இவ்வாறு சொல்கிறார் என கணவர் கூறினார்.

இது குறித்து பொலிசார் நடத்திய விசாரணையில் ரினி தான் ஆபாச புகைப்படங்களை கணவர் செல்போனில் வேண்டுமென்றே பதிவேற்றி அவரை சிக்க வைக்க நினைத்தது தெரியவந்தது.

பொலிசார் கூறுகையில், ஒருமுறை சண்டை காரணமாக ரினியை அவர் கணவர் வீட்டை விட்டு வெளியில் துரத்தினார், பின்னர் மீண்டும் அவரை வீட்டில் சேர்த்து கொண்டார்.

இதில் இருந்தே கணவரை பழி வாங்க துடித்த ரினி இப்படியொரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளார் என கூறினர்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட ரினி மீது நீதிமன்ற விசாரணை நடைபெற்றது. தொடக்கத்தில் அவருக்கு பத்தாண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என கூறப்பட்டது.

ஆனால் இறுதியில் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்படவில்லை, அதற்கு பதிலாக ஆறு ஆண்டுகள் அவர் நன்னடத்தையை சோதனை செய்யவும், பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டில் அவர் கையெழுத்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers