குப்பையில் கண்டெடுக்கப்பட்ட குழந்தைக்கு இந்தியா என பெயர் வைத்த அமெரிக்கர்கள்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்காவில் மரங்கள் நிறைந்த ஒரு இடத்தில் குப்பையோடு குப்பையாக போடப்பட்டிருந்த ஒரு குழந்தை மீட்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு மருத்துவமனை ஊழியர்கள் இந்தியா என பெயர் வைத்துள்ளனர்.

ஜார்ஜியாவில் மரங்கள் நிறைந்த ஒரு பகுதியில் ஏதோ சத்தம் கேட்பதாக சில சிறுவர்கள் தங்கள் தந்தையிடம் கூற, முதலில் அது ஏதோ ஒரு விலங்கின் குரல் என்று எண்ணிய அவர் பின்னர் அது ஒரு குழந்தையின் அழுகுரல் போல் கேட்க, பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்.

பொலிசார் அப்பகுதிக்கு விரைந்தபோது பிளாஸ்டிக் பைக்குள் ஒரு குழந்தை கிடப்பதைக் கண்டுள்ளனர்.

வெளியாகியுள்ள வீடியோவில் ஒரு அதிகாரி அந்த பிளாஸ்டிக் பையை கிழிக்க அதனுள் ஒரு குழந்தை இருப்பதைக் காண முடிகிறது.

தொப்புள் கொடி கூட அகற்றப்படாமல் இரத்தத்துடன் காணப்படும் அந்த பெண் குழந்தையை கண்டதும் பொலிசார் ஒருவர், எவ்வளவு அருமையான குழந்தை என தன்னையறியாமல் வியந்து கூறுவதைக் கேட்க முடிகிறது.

அத்துடன் அவர் அந்த குழந்தையை சீருடையில் பொதிய, அதற்குள் அங்கு வரும் மருத்துவ உதவிக்குழுவினர் நல்ல டவல் ஒன்றில் அதை பொதிந்து தூக்குகிறார்கள்.

அழும் அக்குழந்தையிடம் தனது விரலை ஒருவர் கொடுக்க, அந்த குழந்தை அந்த விரலை பற்றிக் கொள்கிறது.

பின்னர் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட அந்த குழந்தைக்கு மருத்துவமனை ஊழியர்கள் இந்தியா என பெயர் வைத்துள்ளனர்.

மேற்கத்திய நாட்டவர்கள் தங்கள் சொந்த குழந்தைக்கு இந்தியா என பெயர் வைப்பது புதிதில்லை என்பதால், நல்ல நோக்கத்தில்தான் அந்த குழந்தைக்கு இந்தியா என பெயரிட்டிருப்பார்கள் என்றே தோன்றுகிறது.

தற்போது அந்த குழந்தை நல்ல நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ள பொலிசார் அந்த குழந்தையின் தாயைக் கண்டு பிடிக்க பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers