எனது உணர்வு! சகோதரியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பெண்.. பின்னர் நடந்த சம்பவம்

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் சகோதரியை கத்தியால் குத்தி கொலை செய்த பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நியூஜெர்சியை சேர்ந்த அமண்டா ரமீர்ஸ் (27) மற்றும் அன்னா ரமீர்ஸ் (27) ஆகிய இருவரும் இரட்டை சகோதரிகள் ஆவார்கள்.

இந்நிலையில் சகோதரிகள் தங்களது உறவினர்கள் இருவருடன் இரு தினங்களுக்கு முன்னர் விருந்துக்கு சென்றனர்.

விருந்தில் எடுத்து புகைப்படத்தை அன்னா தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார், அதில் உனக்கு எனது உணர்வு தெரியும் என எழுதியிருந்தார்.

இதன் பின்னர் அடுத்த இரண்டு மணி நேரத்துக்குள் அன்னாவை அவர் சகோதரி அமண்டா கத்தியால் குத்தியுள்ளார்.

படுகாயமடைந்த அன்னா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்தார்.

இதை தொடர்ந்து அமண்டாவை பொலிசார் கைது செய்துள்ளனர், இந்த கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

சிறுவயதில் இருந்து உயிருக்கு உயிரான சகோதரிகளாக இருவரும் இருந்த நிலையில் அமண்டாவின் இச்செயல் அவர் குடும்பத்தாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் அன்னாவின் இறுதிச்சடங்குக்காக குடும்பத்தார் இணையதளம் மூலம் நிதி வசூல் செய்து வருகிறார்கள்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers