வடகொரியா அதற்கு சரிப்பட்டு வராது.. கிம் ஜாங்-உன்னை சீண்டும் அமெரிக்கா

Report Print Basu in அமெரிக்கா

அமெரிக்கா-வட கொரியா இடையே மீண்டும் பேச்சுவார்த்தை ஏற்படும் சூழல் உருவாகியுள்ள நிலையில், வட கொரியா தலைவர் கிம் ஜாங்-உன்னை சீண்டும் வகையில் அமெரிக்க புலனாய்வு அமைப்பின் தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் வியட்நாமில் டிரம்ப் மற்றும் கிம்மிற்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை பாதியில் முடிந்தது. இந்த பேச்சுவார்த்தையின் போது அமெரிக்கா தரப்பில் அணு ஆயுத திட்டங்களை கைவிட வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அமெரிக்க விதித்த பொருளாதாரத் தடைக்கு நிவாரணம் கோரி வட கொரியா தனது கோரிக்கையை முன்வைத்தது. இரு தலைவர்களிடையே நிலவிய வேறுபாடுகளால் குறித்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடியவில்லை.

இந்நிலையில், சமீபத்தில் வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னிற்கு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதம் மிகச்சிறந்த ஒன்று என்றும், அதில் உள்ள சுவாரஸ்யமான விஷயங்கள் குறித்து யோசிக்கவுள்ளதாகவும் கிம் தெரிவித்துள்ளார்.

டிரம்ப் இந்த வார இறுதியில் தென் கொரியாவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், கடிதம் குறித்த கிம் ஜாங்-உன் பதில் இருநாடுகளுக்கு இடையே மீண்டும் பேச்சுவார்த்தை ஏற்படும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் தலைவர் ராபர்ட் ஆஷ்லே தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, நாங்கள் தொடர்ந்து வட கொரியாவை மதிப்பீடு செய்து வருகிறாம். வட கொரியா தலைவர் கிம் ஜாங்-உன் அணு ஆயுத திட்டங்களை கைவிட தாயராக இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

ராபர்ட் ஆஷ்லேவின் கருத்து குறித்து வட கொரிய தரப்பில் இன்னும் பதில் வெளிவராத நிலையில், இது சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக பலர் கூறி வருகின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers