இறந்து 27 நிமிடங்களுக்கு பிறகு பெண் செய்த ஆச்சரிய செயல்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்காவில் 27 நிமிடங்கள் உயிரில்லாமல் இருந்த ஒரு பெண் மருத்துவ உதவியால் பிழைத்தபோது யாரும் எதிர்பாராத ஒரு ஆச்சரிய செயலைச் செய்தார்.

அரிசோனாவைச் சேர்ந்த Tina Hinesக்கு தனது வீட்டிலிருக்கும்போது ஒரு நாள் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

முதலுதவியில் இறங்கிய அவரது கணவர் Brian, உடனடியாக ஆம்புலன்சை அழைத்தார். ஆம்புலன்சில் ஏற்றப்பட்ட Tinaவுக்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன் ஆறு முறை ஷாக் கொடுத்து அவரது உயிரை தக்க வைக்க வேண்டியிருந்தது.

அதாவது மொத்தத்தில், கிட்டத்தட்ட 27 நிமிடங்கள் அவரது உடலில் உயிர் இல்லை! பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மூக்கிலும் வாயிலும் குழாய்கள் பொருத்தப்பட்ட நிலையில் கண்விழித்த Tina, முதல் காரியமாக சைகை மூலம் ஒரு நோட்டும் பேனாவும் கேட்டார்.

அதை வாங்கிய Tina ஏதோ அதில் கிறுக்கியது போல் இருந்தது. ஆனால் கவனித்துப் பார்த்தால் அதில் ‘its real' என்று எழுதப்பட்டிருந்தது, அதாவது, அது உண்மைதான் என்று எழுதியிருந்தார் Tina.

அவரிடம், எது உண்மை? என்று கேட்டபோது, வானத்தை நோக்கி பார்த்தார் Tina. பின்னர் சற்று உடல் நலம் தேறி பேச முடிந்தபோது, ஆச்சரியத்துக்குரிய ஒரு விடயத்தைக் கூறினார் Tina.

தான் இறந்ததும், தான் சொர்க்கத்திற்கு சென்றதாகவும், கருப்பு நிற கதவுகளின் முன் நின்ற இயேசுவைக் கண்டதாகவும், சொர்க்கத்தில் பிரகாசமான ஒளியைக் கண்டதாகவும் முகமெல்லாம் பிரகாசமாக Tina விவரிக்க, கேட்டவர்கள் ஆச்சரியத்தில் மூழ்கிப்போனார்கள்.

நடந்தவற்றை தனது அத்தையின் அருகில் இருந்து கவனித்துக் கொண்டிருந்த Madie Johnson என்னும் Tinaவின் மருமகள், நடந்தவை மனதைத் தொட, அதை நினைவு கூறும் வகையில் தனது கையில் ‘its real' என்று பச்சை குத்திக் கொண்டுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers