அமெரிக்கா-ஈரான் இடையே அதிகரிக்கும் பதற்றம்: சண்டையா.. சமாதானமா? முடிவெடுத்தார் டிரம்ப்

Report Print Basu in அமெரிக்கா

ஈரானுடன் பதற்ற நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த விடயத்தில் அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் எடுத்துள்ள முடிவு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பேசிய அமெரிக்கா வெளியுறவுத் துறை செயலாளர் மைக் பாம்பியோ கூறியதாவது, ஈரான் மீதான நெருக்கடியை அமெரிக்கா தொடரும், அதே சமயம் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து தடுப்போம். ஆனால், ஈரானுடனான மோதலை நாங்கள் விரும்பவில்லை என தெரவித்துள்ளார்.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தெஹ்ரானில் அணு குண்டு வைத்திருப்பதைத் தடுக்க இராணுவ நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாக கூறினார், ஆனால், வளைகுடா எண்ணெய் விநியோகத்தைப் பாதுகாக்க இராணுவ நடவடிக்கை திட்டத்தை கைவிட்டுவிட்டார். எண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் மிகச் சிறியவை என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி டிரம்ப் போரை விரும்பவில்லை, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்க நலன்களைப் பாதுகாக்க தேவையானவற்றைச் செய்யும்போது அதன் மூலம் ஈரானுக்கு செய்தியை தெரிவிப்போம் என்று பாம்பியோ கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்