ஈரானுடனான பரபரப்பான சூழலில் 1000 வீரர்களை அனுப்பி வைத்த அமெரிக்கா!

Report Print Kabilan in அமெரிக்கா

ஈரானுடன் மோதல் அதிகரித்து வரும் சூழலில், மத்திய கிழக்கு நாடுகளுக்கு 1,000 வீரர்களை அமெரிக்கா அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அணு ஆயுத சோதனை ஒப்பந்த மீறலில் ஈரான்-அமெரிக்கா இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில், வளைகுடா பகுதியில் தொடர்ந்து எண்ணெய்க் கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவதற்கு காரணம் ஈரான் தான் என்று அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது.

குறிப்பாக, ஹர்மஸ் கடற்பகுதியில் இரண்டு எண்ணெய்க் கப்பல்களை ஈரான் தான் தாக்கியது என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டை ஈரான் திட்டவட்டமாக மறுத்தது.

இதுபோன்ற காரணங்களால் இருநாட்டுக்கும் இடையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், சுமார் ஆயிரம் வீரர்களை கூடுதலாக மத்தியக் கிழக்கு நாடுகளுக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது.

AFP

இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பாட்ரிக் ஷானாஹான் கூறுகையில், ‘ஈரானின் விரோத செயலுக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா ஈரானுடன் எந்த மோதல் போக்கையும் கையாளவில்லை.

ஆனால், எங்களது தேசிய நலன்களை பாதுகாக்கவும், மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றும் எங்களது ராணுவ வீரர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்