மோசமான புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை... ஹெக்கர்களுக்கு கொடுத்த சரியான பதிலடி

Report Print Santhan in அமெரிக்கா

பிரபல ஹாலிவுட் நடிகையான பெல்லா தோர்ன் மோசமான புகைப்படம் வெளியிடுவோம் என்று மிரட்டிய ஹேக்கர்களுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

மிட்நைட் சன், தி பேபி சிஸ்டர் உள்ளிட்ட பல்வேறு ஹாலிவுட் மற்றும் ஹாலிவுட் டிவி சீரியல்களில் நடித்திருப்பவர் பெல்லா தோர்ன்.

இவரது இணையதள பக்கத்தை ஹேக்கர்கள் முடக்கி, அதில் பெல்லா தோர்ன் வைத்திருந்த படங்கள் திருடினர்.

பிறகு அவருக்கு போன் செய்து நாங்கள் கேட்கும் பணத்தை கொடுக்காவிட்டால் உனது படத்தை நெட்டில் வெளியிடுவோம் என்று மிரட்டினர்.


இதில் கடுப்பான பெல்லா, நீ என்ன என்னை மிரட்டுவது, உன்னால் என்னை ஒன்றும் செய்ய முடியாது. என்னுடைய படத்தை வைத்துக்கொண்டு என்னையே மிரட்டுகிறாயா? அவைகளை ஸ்பெஷல் நபர்கள் பார்வைக்கு மட்டும் வைத்திருந்தேன்.

உன்னால் அந்த எண்ணம் சிதைந்துவிட்டது. முட்டாளே, மிரட்டி என்னை பணிய வைக்க உன்னால் (ஹேக்கர்ஸ்) முடியாது என்று கடுமையாக கோபத்தை வெளிப்படுத்தியதுடன், நீ என்ன என்னுடைய படத்தை வெளியிடுவது நானே வெளியிடுகிறேன் என்று கூறி புகைப்படத்தை வெளியிட்டார்.

இதைப் பார்த்து ஹேக்கர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...