விஸ்வரூபம் எடுக்கும் எண்ணெய் கப்பல்கள் தாக்குதல்.. ஆதாரங்களை வெளியிட்டது அமெரிக்கா

Report Print Basu in அமெரிக்கா

ஓமன் வளைகுடாவில் இரண்டு எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு ஈரான் மீது குற்றம்சாட்டிய அமெரிக்கா, அதை நிரூபிக்கும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

கடந்த யூன் 13ம் திகதி ஓமன் வளைகுடாவில் வைத்து இரண்டு எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதல் தொடர்பாக ஈரான் மீது குற்றம்சாட்டிய அமெரிக்கா, வீடியோ ஆதாரம் ஒன்றை வெளியிட்டது. எனினும், அது தொடர்பாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

இந்நிலையில், தற்போது அமெரிக்கா இராணுவம் ஆதாரமாக புகைப்படங்களை வெளியிட்டு விளக்கமும் அளித்துள்ளது. ஒரு புகைப்படம் வெடிக்காத வெடிக்குண்டுகளின் காந்த இணைப்பின் பாகங்கள். அடுத்த புகைப்படம் வெடிக்குண்டுகள் வைக்கப்பட்டதாக கூறப்படும் இடம்.

அதே கப்பலில் வெடித்த குண்டுகளின் புகைப்படத்தையும், மற்றொரு புகைப்படத்தில், வெடிக்காத குண்டுகளை ஈரான் வீரர்கள் அகற்றுவதும், அவர்கள் பயணித்த ரோந்து படகின் படத்தையும் அமெரிக்கா ஆதாரமாக வெளியிட்டுள்ளது.

குற்றச்சாட்டுகளை மறுத்து வந்த ஈரான், தற்போது இந்த புகைப்படங்கள் குறித்த என்ன விளக்கம் அளிக்கும் என உலக நாடுகள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்