54 அடுக்கு மாடி கட்டிடத்தின் மீது மோதி சுக்கு நூறாக நொறுங்கிய ஹெலிகாப்டர்... தெரிய வந்த காரணம்

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவில் 54 அடுக்கு மாடி கட்டத்தில் ஹெலிகாப்டர் ஒன்று திடீரென்று மோதியதால், இது இரட்டை கோபுரம் போன்ற இன்னொரு தாக்குதலா என்று மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

அமெரிக்காவின் தலைநகரான நியூயார்க்கின் Manhattan பகுதியில் இருக்கும் 54 அடுக்கு மாடி கட்டிடம் ஒன்றில் நேற்று பிற்பகல் 2 மணிக்கு திடீரென்று சிறிய ரக ஹெலிகாப்டர் ஒன்று கட்டுப்பாட்டை இழந்ததால், அங்கு தரையிறங்க முற்பட்டது.

ஆனால் மோசமான வானிலை மற்றும் மழை காரணமாக மோதி விபத்துக்குள்ளானதால், பலத்த சத்தம் ஏற்பட்டது.

இதனால் அங்கிருந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். ஏற்கனவே இரட்டை கோபுரத்தின் போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதால், அது போன்ற தாக்குதலாக இருக்குமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவிய நிலையில், இது தீவிரவாதிகளின் தாக்குதல் கிடையாது, விபத்து என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தின் காரணமாக கட்டடங்களில் இருந்த மக்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இதன் காரணமாக விமானி மட்டும் உயிரிழந்துள்ளதாகவும், கட்டிடத்தில் இருந்த ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்திற்குள்ளான ஹெலிகாப்டர் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஒன்று எனவும் இறந்த பயணியின் பெயர் McCormack(58) என்றும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், விபத்து மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers