51 மாடி கட்டிடத்தின் மீது விழுந்து நொறுங்கிய ஹெலிகொப்டர்... பலியான விமானி: கூட்டமாக பொதுமக்கள் வெளியேற்றம்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவின் மன்ஹாட்டன் பகுதியில் அமைந்துள்ள 51 மாடி கட்டிடத்தின் மீது ஹெலிகொப்டர் ஒன்று விழுந்து நொறுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நியூயார்க் நகரத்தில் உள்ள மிட்டவுன் மன்ஹாட்டன் பகுதியிலேயே இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகொப்டரானது மிட்டவுன் மன்ஹாட்டன் பகுதியில் உள்ள 51 மாடி கட்டிடத்தின் உச்சியில் விழுந்து நொறுங்கியுள்ளது.

திங்களன்று பகல் 2 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர், உடனடியாக அப்பகுதியில் உள்ள பொதுமக்களை மொத்தமாக வெளியேற்றியுள்ளனர்.

விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரில் இருந்து கொல்லப்பட்ட விமானியின் உடலை பின்னர் மீட்டுள்ளனர்.

கட்டிடத்தின் உச்சியில் விழுந்த ஹெலிகொப்டரானது உடனையே தீப்பற்றி எரிந்துள்ளது. இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் நெருப்பை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

விபத்தில் கொல்லப்பட்ட விமானியின் பெயர் உள்ளிட்ட தகவல் ஏதும் வெளியாகவில்லை.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்