ஓரினசேர்க்கையாளர் பேரணியில் அரைநிர்வாண நிலையில் இந்தியர் செய்த செயல்... பதறிய மக்கள்

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் நடைபெற்ற ஓரின சேர்க்கையாளர் பேரணியில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய இந்தியரை பொலிசார் அரைநிர்வாணமாக கைது செய்துள்ளனர்.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் ஓரின சேர்க்கையாளர் பேரணி நடைபெற்ற நிலையில் அதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

அதில் அமெரிக்க வாழ் இந்தியரான அப்தாப்ஜித் சிங் (38) என்பவரும் இருந்தார்.

அப்போது இவருக்கும், பேரணியில் வந்த இன்னொரு நபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அது முற்றி மோதலாக மாறியதால் ஆத்திரமடைந்த அப்தாப்ஜித் சிங் தான் வைத்திருந்த பி.பி ரக துப்பாக்கியை காட்டி அந்த நபரை மிரட்டினார்.

அதைபார்த்த மற்றவர்கள் அங்கு பெரிய அளவில் துப்பாக்கி சூடு நடைபெறப்போகிறது என மிரண்டு போய் உயிர்பிழைக்க அங்குமிங்கும் ஓட்டம் பிடித்தனர். அதில் பலர் கீழே விழுந்ததில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டது.

உடனே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிசார் கூட்டத்தினரை அமைதிப்படுத்தினர்.

இதற்கிடையே துப்பாக்கியை காட்டி மிரட்டிய அப்தாப்ஜித் சிங்கை பொலிசார் அரைநிர்வாண நிலையில் கைது செய்ததோடு அவரிடம் இருந்து பி.பி ரக துப்பாக்கியும் பறிமுதல் செய்தார்கள்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers