வீட்டு வாசலில் நடனமாடிய ஏலியன்.. பெண் வெளியிட்ட சிசிடிவி காட்சி

Report Print Basu in அமெரிக்கா

அமெரிக்காவில் அதிசய உயிரினம் ஒன்று வீட்டின் வாகனம் நிறுத்துமிடத்தில் நடனமாடிச் சென்ற காட்சியை அந்த உரிமையாளர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த விவியன் கோம்ஸ் என்ற பெண்ணே இவ்வீடியோவை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து, பேசிய விவியன் கோம்ஸ், வீட்டின் வாகனம் நிறுத்தும் இடத்தில் மர்மமான உருவம் நடக்கும் நிழலை கண்டு அதிர்ச்சியடைந்தேன்.

உடனே சிசிடிவி காட்சியை கண்டேன், அதில், அதிசய உயிரினம் ஒன்று நடனமாடி சென்றது. இதை கண்டு நான் அதிர்ச்சிடைந்தேன். அது என்னவென்று என்னால் சரியாக கூற முடிவில்லை என சமூக வலைதளத்தில் சிசிடிவி காட்சியுடன் பதிவிட்டுள்ளார்.

இதை கண்ட பலர் குறித்த அதிசய உயிரினம், ஹாரி பாட்டர் படத்தில் வரும் பாபி கதாபாத்திரம் போல் உள்ளது என பதிவிட்டுள்ளனர். மேலும், பலர் இது திட்டமிட்டு எடுக்கப்பட்ட வீடியோ என கூறிகின்றனர். எனினும், குறித்த சிசிடிவி காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்