700 பேரை கொன்று தனது வீட்டு தோட்டத்தில் புதைத்தாரா பெரும் கோடீஸ்வரர்? அதிரவைத்த தகவல் குறித்து வெளியான உண்மை

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் கோடீஸ்வரர் ஒருவர் 700 பேரை கொலை செய்து சடலங்களை அவர் வீட்டு தோட்டத்தில் புதைத்ததாக செய்திகள் வந்த நிலையில் அது பொய் என தெரியவந்துள்ளது.

ப்ளோரிடாவை சேர்ந்த ஜெரி ரிச்சட்ஸ் (73) என்ற கோடீஸ்வரர் தனது வீட்டு தோட்டத்தில் சடலம் ஒன்றை புதைத்ததை பக்கத்து வீட்டுக்காரர் பார்த்துள்ளார்.

இதையடுத்து அவர் பொலிசுக்கு இது குறித்து தகவல் கொடுத்தார்.

சம்பவ இடத்துக்கு வந்து பொலிசார் விசாரணை நடத்தியதில் கடந்த 35 ஆண்டுகளாக 700 பேரை ஜெரி கொலை செய்து தனது தோட்டத்தில் புதைத்ததாக தெரியவந்தது.

இதையடுத்து எலும்புக்கூடுகளாக இருந்த 587 சடலங்களை பொலிசார் தோண்டி எடுத்தனர்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட ஜெரியிடம் இவ்வளவு பேரை கொலை செய்ய என்ன காரணம் என பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.

இந்த செய்தி சமீபத்தில் வைரலாக பரவி வந்த நிலையில் இது போலியான செய்தி என தெரியவந்துள்ளது.

அதாவது எம்பயர் செய்திகள் என்ற ஆங்கில செய்திகள் பக்கம் தான் இது தொடர்பான செய்தியை முதலில் வெளியிட்டது.

ஆனால் இது அனைத்தும் பொய்யான செய்தி என தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்