இளம்பெண்ணுக்கு மூளையில் புற்றுநோய் கட்டி... அறுவைசிகிச்சையின் போது மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவில் புற்றுநோய் சிகிச்சைக்காக சென்ற இளம்பெண்ணின் மூளையில் நாடாப் புழுக்களை மருத்துவர்கள் கண்டெடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நியூயார்க் நகரின் மிட்டில்டவுன் பகுதியில் குடியிருந்து வருபவர் ரேச்சல் பால்மா. இவர் தூக்கமின்மை காரணமாக கடுமையாக அவதிப்பட்டு வந்துள்ளார்.

2018 ஜனவரி மாதம், இதன் தாக்கம் அதிகமாகவே, இவரால் எந்த வேலையும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மட்டுமின்றி மறதி நோயும் பிடிபட்டுள்ளது, இதனால் அலுவலகத்திலும், நண்பர்களிடையேயும் அவதிப்பட்டுள்ளார்.

ஒருகட்டத்தில் தம்மால் இனி தாங்கிக்கொள்ள முடியாது என தெரிந்ததும், பெற்றோருக்கு தகவல் அளித்துவிட்டு,

நியூயார்க் நகரத்தில் உள்ள மவுண்ட் சினாய் மருத்துவமனையில் தொடர்பு கொண்டு சிகிச்சைக்கு பதிவு செய்துகொண்டார்.

முதற்கட்டத்தில் பால்மாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மூளையில் புற்றுநோய் கட்டி இருப்பதாக சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து நடைபெற்ற பரிசோதனைகளில் மூளையில் புற்றுநோய் கட்டி இருப்பது மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறுவைசிகிச்சைக்கு நாள் குறித்த மருத்துவர்கள், சம்பவத்தன்று பால்மாவின் மண்டை ஓட்டை திறந்து மூளையில் அறுவைசிகிச்சைக்கு தயாரானார்கள்.

புற்றுநோய் கட்டி என கருதிய மருத்துவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. பால்மாவின் மூளையில் காடை முட்டை அளவுக்கு ஒரு பொருள் இருந்துள்ளது.

மருத்துவர்கள் குழு அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளது. என்ன பொருள் அது என்பது தெரியாமல் திக்குமுக்காடியுள்ளனர்.

தொடர்ந்து அந்த பொருளை வெளியே எடுத்த மருத்துவர்கள் நுண்ணோக்கி உதவியுடன் ஆழமாக அதை ஆராய்ந்துள்ளனர்.

முட்டை வடிவிலான அந்த பொருளை இரண்டாக பிளந்துள்ளனர். அப்போது அதில் இருந்து ஒரு குட்டி நாடாப் புழு வெளியே வந்துள்ளது.

பொதுவாக உரியமுறையில் சமைக்காத பன்றி இறைச்சியை அதிகம் உண்ணும் மக்களுக்கு நாடாப் புழுவின் தாக்கம் இருக்கும் எனவும்,

அல்லது கழிவறையை பயன்படுத்திவிட்டு உரியமுறையில் சுத்தம் செய்து கொள்ளாதவர்களிடமும் இந்த புழுவின் தொற்று இருக்கும் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

பால்மாவுக்கு இதே நிலையில் ஏதேனும் ஒன்றில் அவரது குடலில் புகுந்த நாடாப் புழு பின்னர் மூளைக்குள் புகுந்திருக்கலாம் என தெரிவிக்கின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers