டிரம்ப்-மேக்ரான் இணைந்து நட்ட நட்பு மரம் இறப்பு!

Report Print Kabilan in அமெரிக்கா

வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் டொனால்டு டிரம்ப்-பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரான் ஆகியோர் இணைந்து நட்ட ‘நட்பு மரம்’ பட்டுப்போனது.

அமெரிக்கா-பிரான்ஸ் நாடுகளுக்கு இடையிலான 250 ஆண்டுகால நட்புறவை கொண்டாடும் வகையில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரான் வாஷிங்டனிற்கு வந்திருந்தார்.

அப்போது டிரம்ப்-மேக்ரான் இருவரும் அமெரிக்கா, பிரான்ஸ் இடையிலான நட்புறவை நினைவுகூறும் விதமாக, வெள்ளை மாளிகையின் தெற்கு பகுதியில் ஒன்றாக இணைந்து ஒரு கருவாலி மரக்கன்றை நட்டனர்.

‘Oak Of Friendship' என்று அழைக்கப்பட்ட இந்த மரம் நடுவிழா, அப்போது சர்வதேச ஊடகங்களில் மிக முக்கியமான செய்தியாக இருந்தது. இந்நிலையில், இந்த நட்பு மரம் பட்டுப்போய் விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Chip Somodevilla/Getty Images

வெள்ளை மாளிகை அதிகாரிகளின் மிதமிஞ்சிய கட்டுப்பாடுதான் மரம் பட்டுப்போனதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. மேலும், வெள்ளை மாளிகை தோட்டத்தில் உள்ள மற்ற செடி வகைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட கூடாது என, நட்பு மரத்தின் மீது அதிகாரிகள் சில தெளிப்பான்களை தொடர்ந்து பயன்படுத்தியதாகவும், அதன் காரணமாகவே மரம் பட்டுப்போனதாகவும் சில செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரான்சில் இருந்து கொண்டு வரப்பட்ட இந்த மரம், கடந்த ஆண்டில் நடப்பட்ட ஒரு வாரத்தில் காணாமல் போனது. பின்னர் மிக உயரிய நினைவுப்பரிசு என்பதால், பாதுகாப்பாக வளர்க்க வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக வெள்ளை மாளிகை விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்