உலகையே மிரட்டும் டிரம்ப்.. ஒரே ட்விட்டில் உலக ஜோக்கரான கதை

Report Print Basu in அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், நிலவை பற்றி தான் பதிவிட்ட ஒரே ஒரு ட்விட் மூலம் உலகம் முழுவதும் ஜோக்கராக கிண்டலடிக்கப்பட்டு வருகிறார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் விண்வெளி மற்றும் பிரபஞ்சம் பற்றிய தனது அறிவின் மூலம் உலக மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார், மேலும், நிலவு செவ்வாயின் ஒரு பகுதியாக இருப்பதாக கூறிய அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார்.

டிரம்ப் நிர்வாகத்தின் 1.6 பில்லியன் டாலர் பட்ஜெட் அதிகரிப்பு கோரிக்கையை அமெரிக்க காங்கிரஸால் ஏற்றுக் கொள்ளாதபட்சத்தில், அமெரிக்க விண்வெளி வீரர்கள் 2024 ஆம் ஆண்டில் சந்திரன் தரையிறக்கம் செய்ய முடியாது என்று நாசா நிர்வாகி ஜிம் பிரிடென்ஸ்டெயின் கூறினார்.

இது தொடர்பாக ட்விட்டரில் டிரம்ப் பதிவு ஒன்றை வெளியிட்டார், அதில், நிலவு செவ்வாயின் ஒரு பகுதியாக இருப்பதாக கூறிய அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இதை கண்ட உலகம் முழுவதும் உள்ள ட்விட்டர் பயனர்கள், டிரம்ப்பை கடுமையாக கிண்டிலத்தும், விமர்சித்தும் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers