அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் பட்டியலில் இந்திய பெண்கள் 3பேர்... எவ்வளவு கோடி தெரியுமா?

Report Print Abisha in அமெரிக்கா

அமெரிக்காவின் பிரபல வணிக பத்திரிக்கையான போர்ப்ஸ் வெளியிட்ட சுயமாக சம்பாதித்து கோடீஸ்வரியான பெண்கள் பட்டியலில் 3 இந்திய வம்சாவளி பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.

அந்த வகையில் 21 வயது முதல் 92 வயது வரை உள்ள 80 பேர் கொண்ட 2019-ம் ஆண்டுக்கான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அதில், லண்டனில் பிறந்து இந்தியாவில் வளர்ந்தவரான, அரிஸ்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஜெய்ஸ்ரீ உல்லால் தனது 58-வது வயதில் 140 கோடி டொலர் சொத்துகளுடன் பட்டியலில் 18-வது இடம் பெற்றுள்ளார்.

அதேபோல், வெறும் 2000 டாலர் முதலீட்டுடன் வீட்டிலேயே நிறுவனம் தொடங்கிய ‘சின்டல்’ நிறுவனத்தின் துணை நிறுவனர் நீர்ஜா சேதி 64-வது வயதில், 100 கோடி டொலர் சொத்துகளுடன் பட்டியலில் 23-வது இடம் பெற்றுள்ளார்.

‘ஸ்ட்ரீமிங் டேட்டா டெக்னாலஜி’ என்ற நிறுவனத்தின் துணை நிறுவனரான, 34 வயதான நேஹா நர்கெடே, 36 கோடி டொலர் சொத்துகளுடன் பட்டியலில் 60-வது இடத்தை பிடித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers