முன்னுரிமை வர்த்தக நாடு அந்தஸ்தை இந்தியா இழக்கிறது! டிரம்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Report Print Kabilan in அமெரிக்கா

முன்னுரிமை வர்த்தக நாடு எனும் அந்தஸ்தை இந்தியா இழப்பதாக, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு முன்னுரிமை பெற்ற வர்த்தக நாடு என்ற அந்தஸ்த்தை அமெரிக்கா வழங்கியிருந்தது. அமெரிக்காவின் உள்நாட்டு சந்தை வர்த்தக போக்குவரத்துக்கு, அமெரிக்காவை நியாயமான முறையில் அனுமதிக்க வேண்டும் என்பது ஜி.எஸ்.பி திட்டமாகும்.

இதன்மூலம், இந்தியாவுக்கு இந்த அந்தஸ்து வழங்கப்பட்டது. இத்திட்டத்தில் பெருமளவில் பயனடையும் நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் உள்ளது. சுமார் 5.6 பில்லியன் டொலர் அளவிலான இந்தியப் பொருட்களின் ஏற்றுமதி, எவ்வித வரி விதிப்பும் இன்றி ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இதனால் ரூ.130 கோடி அளவிலான செலவு இந்தியாவுக்கு மிச்சம் ஆகிறது. ஆனால், இந்த திட்டத்தில் இருந்து இந்தியா நீக்கப்பட்டால் ஆபரண கற்கள், ஜவுளி, தோல் பொருட்கள் ஏற்றுமதி ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படும்.

இந்நிலையில் தான் அமெரிக்காவை சமமாக நடத்தவும், அணுகவும் இந்திய சந்தையில் அனுமதிக்கவில்லை என்ற காரணத்தினால், இந்தியாவின் முன்னுரிமை வர்த்தக நாடு என்ற அந்தஸ்து நீக்கப்படுவதாக கடந்த மார்ச் மாதம் டிரம்ப் தெரிவித்தார்.

இதற்கிடையில், டிரம்பின் முடிவில் எவ்வித மாற்றமும் இருக்காது என வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக தகவல் வெளியானது.

அதன்படி, தற்போது முன்னுரிமை வர்த்தக நாடு என்ற அந்தஸ்தை இந்தியா இழப்பதாகவும், வரும் 5ஆம் திகதி முதல் இது அமல்படுத்தப்படும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers