நள்ளிரவில் தரைமட்டமான ஹொட்டல்: 17 பேர் பரிதாப மரணம், பலர் படுகாயம்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவின் ஓக்லஹோமா மாகாணத்தில் திடீரென்று ஏற்பட்ட சூறாவளியில் சிக்கி ஹொட்டல் ஒன்று தரைமட்டமானதில் 17 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஓக்லஹோமா மாகாணத்தில் அமைந்துள்ளது பெருவாரியான மக்கள் பயன்படுத்தும் El Rino ஹொட்டல்.

குறித்த ஹொட்டல் அமைந்துள்ள பகுதியிலேயே பலத்த சூறாவளி தாக்கியுள்ளது. இதில் அந்த ஹொட்டல் தரைமட்டமானதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பொலிசாருக்கும் மீட்பு குழுவினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவப்பகுதிக்கு விரைந்து வந்த குழுவினர், அந்த ஹொட்டலின் இடிபாடுகளில் சிக்கியிருந்த பலரையும் மீட்டுள்ளனர்.

இதனிடையே இரண்டாவது தளத்தில் தங்கியிருந்த 17 பேரின் நிலை என்னவானது என தெரியவில்லை என மீட்பு குழு தெரிவித்துள்ளது.

இதனால் அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், இதுவரை எத்தனைபேர் மரணமடைந்தனர், காயங்களுடன் மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பில் உறுதியான தகவல் ஏதும் வெளியாகவில்லை.

சனிக்கிழமை El Rino ஹொட்டல் அமைந்திருந்த பகுதியில் தாக்கிய அந்த சூறாவளியானது, மிகவும் சக்தி வாய்ந்தது என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மாகாண நிர்வாக அதிகாரிகள் சேதம் தொடர்பில் ஞாயிறன்று மதிப்பீட்டு செய்ய உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers