ஈரானுடன் போர் செய்ய விரும்பவில்லை: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப்

Report Print Kabilan in அமெரிக்கா

ஈரானுடன் போர் செய்ய விரும்பவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்திருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்று கூறிவந்த நிலையில், அந்நாட்டுடனான ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, ஈரானின் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்து வந்தது. இந்நிலையில், அணு ஆயுத ஒப்பந்தத்தில் பிற நாடுகளின் ஆதரவுடன் ஈரான் தொடர்ந்து வருகிறது. அத்துடன் இதில் விதிமுறைகளை பின்பற்ற முடியாது என்று ஈரான் சமீபத்தில் தெரிவித்தது.

இதன் காரணமாக அமெரிக்கா-ஈரான் இடையே மோதல் அதிகமாகியுள்ளது. இருநாடுகளுக்கு இடையே போர் நடைபெறுமா என்ற அச்சம் நிலவியது. அதனைத் தொடர்ந்து ஈரானுடன் போர் புரிய அமெரிக்கா விரும்பவில்லை என அந்நாட்டு வெளியுறவு செயலாளர் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஈரானுடன் போர் புரிய தனக்கு விருப்பமில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், ஈரான்-அமெரிக்கா இடையேயான பதற்றத்தை தணிக்க வழிகளை கண்டறியும் பணியில் அமெரிக்க அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, வளைகுடா நாடுகளுக்கு ஏவுகணை அமைப்புகளையும், போர்க் கப்பலையும் அமெரிக்கா அனுப்பி வைத்தது. வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவம் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சுறுத்தல் எழுந்திருப்பதால், டிரம்ப் நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாகக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

REUTERS/Carlos Barria

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers