அமெரிக்காவில் கட்டிடத்துக்குள் பாய்ந்த போர் விமானம்! அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய விமானி

Report Print Kabilan in அமெரிக்கா

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் போர் விமானம் கட்டிடத்துக்குள் பாய்ந்த விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

கலிபோர்னியாவில் உள்ள மார்ச் ஏர் ரிசர்வ் பேஸ் விமானப்படை தளத்தில் இருந்து, விமானப்படைக்கு சொந்தமான எப்-16 ரக போர் விமானம் நேற்றைய தினம் வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு சென்றது.

குறித்த விமானம் வேன் புரேன் பவுலேவார்ட் நகரத்தின் மீது பறந்துகொண்டிருந்தது. பிற்பகல் 3.45 மணியளவில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம், அங்கிருந்த ஒரு கட்டிடத்தின் மீது மோதி ஒரு கிடங்குக்குள் பாய்ந்தது.

இந்த விபத்தில் கிடங்கின் ஒரு பகுதி தீப்பற்றி எரிந்ததுடன், 5 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விமானத்தை ஓட்டிய விமானி துரிதமாக செயல்பட்டு, பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பினார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...