வைரலாவதற்காக தங்கையை முத்தமிட்ட நபர்: இம்முறை சிக்கியது யார் தெரியுமா?

Report Print Balamanuvelan in அமெரிக்கா

சமீபத்தில் இணையத்தில் பிரபலமாவதற்காக தனது தங்கையின் உதடுகளில் முத்தமிட்ட ஒரு நபர் இம்முறை வைரலாவதற்காக தன் தாயின் உதடுகளில் முத்தமிட்டிருக்கிறார்.

கலிபோர்னியாவைச் சேர்ந்த Chris Monroe, இணையத்தில் பிரபலமாவதற்காக ஏடாகூடமான வீடியோக்களை உருவாக்கி வெளியிடுவது வழக்கம்.

இதற்குமுன் மார்ச் மாதம் தனது தங்கையின் உதடுகளில் Chris முத்தமிடும் ஒரு வீடியோவை அவர் வெளியிட்டார்.

அந்த வீடியோ உண்மையாகவே வைரலானது, அதை 7.3 மில்லியன் பேர் பார்த்தார்கள். அதனால் மீண்டும் ஒரு வைரல் வீடியோவை உருவாக்குவதற்காக தனது தாயையே முத்தமிட முடிவு செய்தார் அவர்.

ஆனால் Chrisஇன் தாய் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. வீடியோவை தயார் செய்து தன் திட்டத்தை நிறைவேற்றலாம் என்று அவர் முடிவு செய்ய, அவரது தாய் அவரது ஏடாகூட திட்டத்திற்கு ஒப்புக்கொள்ளாமல் போகவே, அவர் தனது வீடியோவை கட் செய்ய வேண்டியதாயிற்று.

பின்னர் தனது தாயின் கையில் காலில் விழுந்து கெஞ்சி கூத்தாடி ஒரு வழியாக அவரை சம்மதிக்க வைத்தார் Chris.

கடைசியாக Chrisஇன் தாய் அவரது உதடுகளில் முத்தமிட, அந்த வீடியோவை பதிவேற்றம் செய்தார் Chris.

ஆனால் அவர் எதிபார்த்ததுபோல் அந்த வீடியோ வைரலாகவில்லை. Chris தங்கையை முத்தமிட்ட வீடியோவை விட குறைவான பார்வையாளர்களே அந்த வீடியோவை பார்வையிட்டிருந்தார்கள்.

Chrisஇன் ஏடாகூட வீடியோவுக்கு 660,000 ஹிட்ஸ்கள் மட்டுமே கிடைத்துள்ளது.!

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers