1 டொலருக்கு வாங்கிய லொட்டரி டிக்கெட்டால் கோடீஸ்வரியாக மாறிய பெண்

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவில் அன்னையர் தினத்தன்று ஒரு பெண் வாங்கிய 1 டொலர் மதிப்புள்ள லொட்டரி டிக்கெட்டுக்கு, 1.3 மில்லியன் டொலர் பரிசுத்தொகை கிடைத்துள்ளது.

அமெரிக்காவின் வட கரோலினாவை சேர்ந்த வில்கா ரோமன் என்பவர் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, தன்னுடைய வருங்கால கணவன் மற்றும் சகோதரி Neris உடன் சேர்ந்து அன்னையர் தின உணவை பரிமாறிக்கொண்டனர்.

அன்றைய தினம் 1 டொலருக்கு ஒரு லொட்டரி டிக்கெட் வாங்கிய Neris, அதனை தன்னுடைய சகோதரி வில்கா ரோமனுக்கு பரிசாக கொடுத்துள்ளார்.

அடுத்தநாள் வில்கா தன்னுடைய வருங்கால கணவருடன் சேர்ந்து விடுமுறை மற்றும் அன்னையர் தினத்தை கொண்டாடி கொண்டிருந்துள்ளார்.

அப்போது தன்னுடைய லொட்டரி டிக்கெட் என்னை சோதனை செய்யுமாறு கணவரிடம் கூறியுள்ளார். அவரும் சோதித்தபோது, 1.3 மில்லியன் டொலர் பரிசுத்தொகை வென்றிருப்பதாக தெரியவந்துள்ளது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த 2 பேரும், உடனடியாக தங்களுடைய காரை திரும்பிக்கொண்டு பரிசுத்தொகையை பெற கரோலினா கிளம்பியுள்ளனர்.

ஆனால் இந்த மகிழ்ச்சியில் Neris-ஐ மறந்துவிட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள வில்கா ரோமன், இந்த பணத்தில் கார் மற்றும் ஒரு புதிய வீடு வாங்க உள்ளதாக கூறியுள்ளார்.

கரோலினா வரலாற்றில் மூன்றாவது மிகப்பெரிய லொட்டரி பரிசுத்தொகை இது என உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers