கர்ப்பிணி என கதறியும் பெண்ணை சுட்டுக் கொன்ற பொலிஸ் அதிகாரி: ஒரு அதிர்ச்சி வீடியோ!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், நான் கர்ப்பிணி என கதறியும் பொலிஸ் அதிகாரி ஒருவர் ஈவிரக்கமின்றி இளம்பெண் ஒருவரை சுட்டுக் கொல்லும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வெளியாகியுள்ள வீடியோவில் அந்த பொலிஸ் அதிகாரி அந்த பெண்னை துரத்த, அவர், நீங்கள் என்னை துன்புறுத்துகிறீர்கள் என்று சத்தமிடுகிறார்.

அந்த பெண்ணை டேசரால் பொலிஸ் அதிகாரி தாக்க, அவர் கீழே விழுகிறார். அவளுக்கு மேலாக நிற்கும் அந்த அதிகாரி அவளுடன் கைகலப்பில் ஈடுபட, அந்த பெண் எழுந்து மீண்டும் ஓடுகிறார்.

தொடர்ந்து அந்த பெண்ணை பொலிஸ் அதிகாரி துரத்த, வேறு வழியின்றி கீழே அமர்ந்த அந்த பெண், நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று கதறுகிறார்.

அதற்கு சற்றும் செவி கொடுக்காத அந்த அதிகாரி அந்த பெண்ணை ஐந்து முறை துப்பாக்கியால் சுட, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் அந்த பெண்.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்த, பொலிசார் வேறு ஒரு கதையை கூறுகின்றனர்.

அந்த அதிகாரி அந்த பெண்ணை கைது செய்ய முயன்றதாகவும், அந்த பெண்ணோ பொலிஸ் அதிகாரியின் டேசரை பிடுங்கி அவர் மீதே தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கிறார்கள் பொலிசார்.

தன் மீது டேசரை பிரயோகித்ததாலேயே வேறு வழியின்றி அந்த அதிகாரி அந்த பெண்ணை சுட்டுக் கொன்றதாக தெரிவிக்கிறார்கள் பொலிசார்.

அத்துடன் தங்கள் பொலிஸ் நிலைய பேஸ்புக் கணக்கையும் பொலிசார் அகற்றிவிட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்