இரண்டு சுற்றுலா விமானங்கள் வானில் நேருக்கு நேர் மோதல்: ஐந்து பேர் பலி, பத்து பேர் காயம், ஒருவர் மாயம்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்காவில் இரண்டு சுற்றுலா விமானங்கள் வானில் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஐந்து பேர் பலியானார்கள், பத்து பேர் காயமடைந்தார்கள், ஒருவரைக் காணவில்லை.

அமெரிக்காவின் அலாஸ்கா நகருக்கு அருகில் இரண்டு floatplanes எனப்படும் மிதவை விமானங்கள் வானில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

எதனால் இந்த விபத்து நேரிட்டது என்பது தெரியவில்லை என ஃபெடரல் விமானத்துறையின் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

மோதிக்கொண்ட விமானங்களில் ஒன்றில் 11 பயணிகள் இருந்துள்ளார்கள். அவர்களில் 10 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவரின் நிலைமை மோசமாக உள்ளது.

இன்னொரு விமானத்தில் ஐந்து பயணிகள் இருந்துள்ளார்கள். முதல் விமானத்தில் பயணித்த 11ஆவது நபரும் இரண்டாவது விமானத்தில் பயணித்த அனைவரும்தான் உயிரிழந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்கள் என்று நம்பப்படுகிறது.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் Royal Princess என்னும் சுற்றுலா கப்பலின் பயணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

மே மாதம் 18ஆம் திகதி அந்த கப்பல் புறப்படுவதாக இருந்தது. விமான விபத்தில் அதன் பயணிகள் உயிரிழந்துள்ளதை அடுத்து, திட்டமிட்டபடி அந்த சுற்றுலா கப்பல் புறப்படாது என்று தெரிகிறது.

நேற்று நடந்த இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers