நோயாளிகளுக்கு போதை மருந்தை பரிந்துரைத்த இந்திய மருத்துவர்: நீதிமன்றம் அதிரடி

Report Print Arbin Arbin in அமெரிக்கா

இந்திய வம்சாவளி மருத்துவர் ஒருவர் நோயாளிகளுக்கு வலி நிவாரணியாக போதை மருந்து அளித்த விவகாரத்தில் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்தில் வசித்து வருபவர் 66 வயதான இந்திய வம்சாவளியை சேர்ந்த மருத்துவர் பவன் குமார் ஜெயின்.

இவர் அறுவை சிகிச்சை செய்யும் நபர்களுக்கு அத்தியாவசிய சோதனைகள் எதையும் மேற்கொள்ளாமல், போதை மருந்தை வலி நிவாரணியாக பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்துள்ளார்.

இதையடுத்து, மருத்துவ மோசடியிலும் ஈடுபட்டதாக இவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இவரது சிகிச்சையில் 2009 ஆம் ஆண்டு நோயாளி ஒருவர் மூச்சு திணறி இறந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட நியூ மெக்சிகோ மருத்துவ கழகம், கடந்த 2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பவன் குமாரின் மருத்துவ உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்தது.

இது தொடர்பான வழக்கு விசாரணை லாஸ் குரூசில் உள்ள நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இதில் அவர் மருத்துவ மோசடியில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers