புகழ்பெற்ற இயக்குநரை கொலை செய்த நபர்.. 34 ஆண்டுகளுக்கு பின்னர் கைது!

Report Print Kabilan in அமெரிக்கா

அமெரிக்காவின் புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி இயக்குநரை கொலை செய்த குற்றவாளி, 34 ஆண்டுகளுக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் ‘டல்லாஸ்’, ‘மிஷன் இம்பாசிபல்’, ‘ஹவாய் ஃபைவ் ஒ’ போன்ற புகழ்பெற்ற நிகழ்ச்சிகளின் இயக்குநராக பணிபுரிந்தவர் பெரி கிரானே(57).

இவர் கடந்த 1985ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். தனது வீட்டின் படுக்கை அறையில் சடலமாக கிடந்த கிரானேவை, அவரது வீட்டு வேலைக்காரர் பார்த்ததைத் தொடர்ந்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

Getty

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார், கிரானேவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் வெளியான அறிக்கையில் பெரி, பெரிய பீங்கான் பொருள் கொண்டு கடுமையாக தாக்கப்பட்டது தெரிய வந்தது.

ஆனால், கொலையாளி குறித்து எந்த தடயமும் கிடைக்காமல் பொலிசார் திணறி வந்தனர். இந்நிலையில் தான், தனிப்பிரிவு பொலிசார் கிரானேவின் பிரேத பரிசோதனை அறிக்கையை மீண்டும் பரிசோதித்தனர்.

அப்போது தான் பெரியை கொலை செய்த நபர் குறித்த தகவல் தெரிய வந்துள்ளது. வடக்கு கலிபோர்னியாவைச் சேர்ந்த எட்வர்டு கியாத்(52) என்பவரே கிரானேவை கொலை செய்ததை பொலிசார் கண்டுபிடித்தனர்.

WSOC-TV

அதனைத் தொடர்ந்து, அவரை கைது செய்த பொலிசார் அவரிடம் நடத்திய விசாரணையில், தனக்கும் கிரானேவுக்கும் இடையே இருந்த தனிப்பட்ட முன்விரோதம் காரணமாக அவரை கொலை செய்ததாக கியாத் ஒப்புக்கொண்டார்.

தற்போது பொலிஸ் காவலில் கியாத் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர் கொலை செய்தது உறுதி செய்யப்பட்டால் ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...