வட கொரியா ஏவுகணை சோதனை.. பல்டியடித்தார் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்

Report Print Basu in அமெரிக்கா

வட கொரியாவின் சமீபத்திய ஏவுகணை சோதனை நம்பிக்கை மீறுவதாக இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளர்.

10 நாட்களில் வட கொரியா இரண்டு ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக தென் கொரியா அறிவித்திருந்தது. இந்நிலையில், அதன் விளைவாக வட கொரியாவின் சரக்கு கப்பல் ஒன்றை அமெரிக்க கைப்பற்றியதாகவும், வட கொரியா நடத்திய ஏவுகணை சோதனையால் யாருக்கும் மகிழ்ச்சி இல்லை என்றும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கருத்து தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், தான் முன்பு கூறிய கருத்திலிருந்து பின்வாங்கும் வகையில் டிரம்ப் பேசியுள்ளர். இதுகுறித்து அவர் பேசியதாவது, வட கொரியாவின் சமீபத்திய ஏவுகணை சோதனை நம்பிக்கை மீறுவதாக நான் கருதவில்லை.

கிம்-க்கும் எனக்கும் இடையே ஒரு நல்லுறவு உள்ளது. சில சமயங்களில் கிம் மீதுள்ள நம்பிக்கை இழக்க கூடும். அதாவது, சில கட்டத்தில் நம்பிக்கை இழப்பது சாத்தியம் தான். ஆனால், தற்போது நான் அந்த நிலைப்பாட்டில் இல்லை.

குறுகிய தூர ஏவுகணைகளையே வடகொரியா சோதனை செய்துள்ளது. அவை மிகவும் நிலையானது என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...