பொலிசிடம் பாலியல் குற்றவாளி போட்ட சபதம்... அதிர்ந்து போய் பெண்களை எச்சரித்த காவல்

Report Print Basu in அமெரிக்கா

அமெரிக்காவில் குழந்தையை துஷ்பிரேயாகம் செய்த வழக்கில் தண்டனை பெற்ற கொடூரன், சிகிச்சையின் போது மருத்தவர்களிடம் போட்ட சபதத்தால் பொலிசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆர்னகன்சாஸ் மாகாணத்தில், ஹேம்ஸ்பெஸ்ட் மாவட்டத்தில் 4 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டவன் 38 வயதான ஜான் வெஸ்ட், இவன் மிகவும் ஆபத்தான செக்ஸ் குற்றவாளி பதிவில் இடம்பெற்றவன்.

கடந்த மாதம் பொலிஸ் பிடியிலிருந்த வெஸ்ட், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். மனநிலை பாதிக்கப்பட்டிருந்த வெஸ்ட் சிகிச்சையின் போது இயல்பு நிலைக்கு திரும்பினான் என பொலிசார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

மேலும், நான் தொடர்ந்து மருத்துவ சிகிச்சையில் இருக்கமாட்டேன், நான் விடுதலையாகி வெளியே சென்றவுடன் நான் பார்க்கும் முதல் பெண்ணை துஷ்பிரயோகம் செய்வேன் என மருத்துவ ஊழியர்களிடம் வெஸ்ட் சபதமிட்டுள்ளான்.

வெஸ்ட் குறித்து பெண்களை எச்சரிக்கும் வகையிலும், பாதுகாத்துக்கொள்ளும் வகையிலும் பொலிசார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். மேலும், அவசர உதவிக்கு 911 என்ற எண்ணை தொடர்பு கொள்ளும் படி அறிவித்துள்ளனர்.

எனினும், வெஸ்ட் மீண்டும் ஒழுங்கற்ற நடத்தை குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டு காவலில் இருப்பதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில், அவன் எப்போது விடுதலை செய்யப்படுவான் என்பது குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers