சட்ட விரோத புலம்பெயர்ந்தோராக இருந்தாலும் அவர்களுக்கும் மருத்துவ சேவை வழங்கப்பட வேண்டும்: முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

கலிபோர்னியாவில் பிரச்சாரம் ஒன்றில் பேசிய அமெரிக்க முன்னாள் துணை ஜனாதிபதி, சட்ட விரோத புலம்பெயர்ந்தோராக இருந்தாலும் அவர்களுக்கும் மருத்துவ சேவை வழங்கும் கடமை நாட்டுக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தனது உரையில் மருத்துவ சேவை குறித்து பேசிய அமெரிக்க முன்னாள் துணை ஜனாதிபதியான Joe Biden, யாருக்கெல்லாம் மருத்துவ உதவிகள் தேவைப்படுகிறதோ அவர்கள் சட்டப்படி நாட்டில் வாழ்பவர்களா அல்லது சட்ட விரோதமாக வாழ்பவர்களா என்றெல்லாம் பார்க்காமல் அவர்களுக்கும் மருத்துவ சேவை வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் நாடு முழுவதும் இன்னும் அதிக மருத்துவமனைகள் தொடங்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி டிரம்பின் பெயரைக் குறிப்பிடாமல், அவர் பயத்தையும் கரிசனையையும் உருவாக்க முயற்சி செய்வதாக குற்றம் சாட்டினார் Biden.

ஆவணப்படுத்தப்பட்டவர்களா அல்லது ஆவணப்படுத்தப்படாதவர்களா என்றெல்லாம் பார்க்காமல் மருத்துவ உதவி தேவையிலிருப்போருக்கு சேவைகள் கிடைக்கச் செய்வது நமது கடமை என்றார் அவர்.

ஆனால் எவ்வித சேவையை அவர் மனதில் வைத்து பேசுகிறார் என்பதையோ, குடிமக்களுக்கும் சட்டப்பூர்வ புலம்பெயர்ந்தோருக்கும் ஒரே மாதிரியான சேவை வழங்கப்பட வேண்டும் என்று கூருகிறாரா என்பதையோ அவர் குறிப்பிட்டுப் பேசவில்லை.

2020ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் Joe Biden வேட்பாளராக களமிறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்