பொலிசாரின் அவசர எண்ணுக்கு அழைத்த சிறுவன்.. பின்னர் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

Report Print Kabilan in அமெரிக்கா

அமெரிக்காவில் பொலிசாரின் அவசர எண்ணுக்கு அழைத்த சிறுவன் ஒருவன், தனக்கு நண்பனாக முடியுமா என்று கேட்ட நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது

ஃபுளோரிடா மாகாணத்தின் டல்லஹாசி பொலிசாரின் அவசர எண்ணுக்கு, 6 வயது சிறுவன் ஒருவன் அழைத்துள்ளான். அச்சிறுவன் தான் தனிமையாக இருப்பதாகவும், நீங்கள் என் நண்பனாக இருக்க முடியுமா என்றும் கேட்டுள்ளான்.

சிறுவனின் இந்த வேண்டுகோளை கேட்ட பொலிசாருக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுத்தது. அதனைத் தொடர்ந்து, குறித்த சிறுவனின் வீட்டுக்கு கையில் பொம்மையுடன் சென்ற பொலிசார், தங்களது காரில் அவனை அழைத்துச் சென்று சுற்றிக்காட்டி மகிழ்ச்சிப்படுத்தினர்.

மேலும் அவசர எண் குறித்தும், அதன் பயன்பாடு குறித்து சிறுவனுக்கு விளக்கிய பொலிசார் அறிவுரையும் வழங்கினர். அத்துடன் இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் டல்லஹாசி பொலிசார் புகைப்படங்களை பகிர்ந்து, ‘எங்களுக்கு புதிய நண்பன் கிடைத்துள்ளார்’ என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்