திருமணம் முடிந்த 5 மணி நேரத்தில் மரணமடைந்த இளைஞர்: மனைவி கூறிய உருகவைக்கும் காரணம்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில் கல்லீரல் புற்றுநோயால் அவதிப்பட்டுவந்த இளைஞர் ஒருவர் திருமணம் முடிந்த 5 மணி நேரத்தில் மரணமடைந்துள்ளார்.

அயோவா மாகாணத்தின் வேவர்லி பகுதியில் குடியிருந்துவரும் 20 வயதான டிரிஸ்டின் லேவ் என்ற இளைஞரே திருமணம் முடிந்த 5 மணி நேரத்தில் மரணமடைந்துள்ளார்.

கடந்த ஈஸ்டர் நாளில் தமது நீண்ட நாள் தோழியிடம் முதன்முறையாக தனது காதலை வெளியிட்டு, திருமணம் செய்துகொள்ள அனுமதி கோரிள்ளார்.

தொடர்ந்து ஒருவார காலத்தில் இருவருக்குமான திருமணம் நடந்துள்ளது. ஆனால் திருமணம் முடிந்த 5 மணி நேரத்தில் டிரிஸ்டின் மரணமடைந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மனம் திறந்த அவரது மனைவி, எனது வாழ்க்கையின் காதல் அவர். பல நூறு ஆண்டுகள் வாழ்ந்தாலும் கிடைக்காத நெருக்கத்தையும் ஈர்ப்பையும் இந்த சில மணித்துணிகளில் இருவரும் பெற்றுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

டிரிஸ்டின் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்க ராணுவத்தில் பயிற்சிக்காக இணைந்துள்ளார்.

ஆனால் மருத்துவ ரீதியாக தகுதி இழந்ததாக கூறி 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவரை அமெரிக்க ராணுவம் வெளியேற்றியுள்ளது.

இந்த நிலையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவருக்கு கல்லீரல் புற்றுநோய் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

தற்போது மரணமடைந்த டிரிஸ்டின் தொடர்பில் இறுதிச்சடங்கு மேற்கொள்ள நண்பர்கள் பொதுமக்களிடம் இருந்து நிதி வசூல் செய்து வருகின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers