ஒருவேளை நான் இறந்துவிட்டால்... அப்பா உங்களை நேசிக்கிறேன்: துப்பாக்கிச்சூடு நடந்த பள்ளியிலிருந்து ஒரு திகில் குறுஞ்செய்தி!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்காவின் கொலராடோ பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டின்போது, ஒரு மாணவன் தன் தந்தைக்கு அனுப்பிய திகிலூட்டும் குறுஞ்செய்திகளை பகிர்ந்துகொண்டுள்ள அந்த தந்தை, தன் வாழ்விலேயே அதுதான், தான் மிகவும் பயந்த தருணம் என்று கூறியுள்ளார்.

அதே பள்ளியில் பயிலும் Devon Erickson (18) என்ற மாணவனும் Alec என்னும் Maya McKinney (16) என்ற மாணவியும் திடீரென பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் Kendrick Castillo (18) என்ற மாணவன் உயிரிழந்ததோடு 8 பேர் காயமடைந்தனர்.

இந்நிலையில் துப்பாக்கிச்சூட்டின்போது அந்த பள்ளியில் படித்த Eldon Elledge என்பவருடைய மகன், தான் மறைந்திருந்த இடத்திலிருந்து, தனது தந்தைக்கு அனுப்பிய குறுஞ்செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

அந்த மாணவன் தன் தந்தைக்கு அனுப்பிய முதல் செய்தியில், அப்பா, பள்ளியில் திடீரென சைரன் ஒலி கேட்கிறது, ஏதேதோ அறிவிப்புகள் செய்கிறார்கள், நான் ஒரு அறைக்குள் மறைந்திருக்கிறேன், எனக்கு பயமாக இருக்கிறது என்று செய்தி அனுப்பியிருக்கிறார்.

அவரது தந்தை பதிலுக்கு, ஓகே, நீ அமைதியாக இரு, இந்த மாதிரியான நேரங்களில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நீ எடுத்த பயிற்சியை நினைவில் கொள் என்று கூறுகிறார்.

தயவு செய்து நீங்கள் வந்து என்னை அழைத்துச் சென்று விடுங்கள் என்று அவன் கூற, அவர் இதோ வந்து கொண்டே இருக்கிறேன் என பதில் செய்தி அனுப்புகிறார்.

ஒரு கட்டத்தில் நிலைமை மிகவும் பரபரப்படைய, அப்பா, துப்பாக்கி சுடும் சத்தம் கேட்கிறது, ஒரு வேளை நான் இறந்து விட்டால்... அப்பா, உங்களை நேசிக்கிறேன் என்று செய்தி அனுப்பியிருக்கிறார் அந்த மாணவர்.

இப்படி ஒரு செய்தியை கேட்ட அந்த மனிதருக்கு எப்படி இருந்திருக்கும், தன் வாழ்விலேயே அதுதான், தான் மிகவும் பயந்த தருணம் என்று கூறுகிறார் Eldon.

அதிர்ஷ்டவசமாக Eldonஇன் மகன் எந்த ஆபத்துமின்றி தனது தந்தையுடன் இணைந்துவிட்டான் என்றாலும், அந்த திகில் தருணங்களை தன்னால் மறக்க இயலாது என்கிறார் அவர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers