திருமணத்துக்கு பெண் தேடும் கோடீஸ்வரர்... வரிசையில் காத்திருக்கும் பெண்கள்... வைரலாகும் புகைப்படம்

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் கோடீஸ்வரர் ஒருவர் தனக்கு திருமணத்துக்கு பெண் வேண்டும் என விளம்பர பலகையின் மூலம் வித்தியாசமான முறையில் விளம்பரம் கொடுத்துள்ளார்.

சால்ட் லேக் நகரை சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் விளம்பர பலகை மூலம் வெளியிட்டுள்ள விளம்பரத்தை நகரில் ஆங்காங்கே காண முடிகிறது.

அதில் தனக்கு மனைவியாக வர பெண் வேண்டும், இதற்கான தேர்வு நிகழ்ச்சி ஜூன் 7ஆம் திகதி நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

விளம்பரம் கொடுத்த கோடீஸ்வரரின் பெயர் இன்னும் வெளியிடப்படாத நிலையில் அவரின் வயது 35லிருந்து 40 வரை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

அவர் ஆறு அடி உயரம் கொண்டவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கோடீஸ்வரரின் விளம்பரத்தை தொடர்ந்து அவருக்கு மனைவியாக வேண்டும் என இதுவரை 400 பெண்கள் விண்ணப்பித்துள்ளனர்.

விண்ணப்ப படிவத்தில் பெண்களின் வயது, கல்வி தகுதி, உடல் அளவு குறித்த தகவல்கள் கேட்கப்பட்டுள்ளது.

தேர்வு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பெண்களில் இருந்து 20 பேரை அவர் தேர்வு செய்வார். பின்னர் அதிலிருந்து இருவரை தேர்வு செய்து டேட்டிங் செல்லவுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers