வீட்டின் காலிங் பெல்லை அழுத்திய முதலை... கதவை திறக்க வந்த போது அதிர்ந்த பெண்... வைரலாகும் வீடியோ

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் ஒரு வீட்டுக்கு வந்த முதலை காலிங்பெல்லை அடித்து விட்டு தரையோடு தரையாக படுத்துக் கிடந்த வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் வசித்து வருபவர் கரன் அல்பனோ.

அல்பனோ வீடு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள நிலையில் அவரது வீட்டின் காலிங் பெல்லை சில தினங்களுக்கு முன்னர் யாரோ அழுத்தியுள்ளனர்.

பின்னர் வீட்டின் கதவு ஓட்டை வழியாக அல்பனோ வெளியில் பார்த்த போது அதிர்ச்சியடைந்தார்.

காரணம் காலிங் பெல்லை அழுத்திய பெரிய முதலை ஒன்று தரையில் படுத்து கிடந்துள்ளது.

இதையடுத்து வனத்துறையினருக்கு அல்பனோ தகவல் கொடுத்தார்.

முதலை காலிங் பெல்லை அடிக்கும் காட்சி சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ள நிலையில் அது வைரலாக பரவி வருகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...