வெளிநாட்டில் சாதித்த காட்டிய இந்திய நடனக் குழு... பரிசு மட்டும் எத்தனை கோடி தெரியுமா?

Report Print Santhan in அமெரிக்கா

இந்தியாவைச் சேர்ந்த நடனக்குழு ஒன்று அமெரிக்காவில் நடந்த நடன நிகழ்ச்சியில் 1 மில்லியன் டொலர் பரிசுத் தொகையை வென்றுள்ளதால், அந்த குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

பிரபல தனியார் தொலைக்காட்சியான என்பிசியில் அமெரிக்க நடன நிகழ்ச்சியான வேர்ல்ட் ஆப் டான்ஸ் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இந்த நடன நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நடனக் குழுக்கள் பங்கேற்றன.

நடுவர்களாக பிரபல பாடகி ஜெனிபர் லோபஸ் இருந்தார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த தி கிங்ஸ் என்ற 14 பேரைக் கொண்ட குழு தங்களது திறமையை அற்புதமாக வெளிப்படுத்தி ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்(இலங்கை மதிப்பில் 17,74,40,000 கோடி ரூபாய்) பரிசுத் தொகையை வென்றுள்ளது.

வெற்றி பெற்ற தி கிங்ஸ் நடனக் குழுவுக்கு பாலிவுட் நடனக் கலைஞர் பாரா கான் உட்பட பலரும் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers