மக்களை பாதுகாக்க இஸ்ரேலுக்கு நூறு சதவிதம் அமெரிக்கா ஆதரவு தரும்! டொனால்டு டிரம்ப் ட்வீட்

Report Print Kabilan in அமெரிக்கா

காசா மீது இஸ்ரேல் நடத்திய பதில் தாக்குதலுக்கு அமெரிக்கா முழுமையாக ஆதரவு அளிக்கிறது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் போராளிகள் காசா முனையில் இருந்து, சுமார் 500 ராக்கெட்டுகளை ஏவி இஸ்ரேல் நாட்டின் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்தினர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 4 பேர் பலியாகினர்.

இந்நிலையில், இஸ்ரேல் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறுகையில்,

‘மறுபடியும் ஹமாஸ் மற்றும் ஜிஹாத் ஆயுத குழுக்கள் இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளன. தங்கள் மக்களை பாதுகாக்க இஸ்ரேல் நடத்திய பதில் தாக்குதலுக்கு அமெரிக்கா நூறு சதவிதம் ஆதரவு தரும்.

இஸ்ரேலுக்கு எதிரான தீவிரவாத செயல்களால் காசா மக்களுக்கு எதுவும் கிடைக்கப்போவதில்லை. இதனால் துயரம் தான் அதிகரிக்கும். வன்முறையை நிறுத்திவிட்டு அமைதியை நோக்கி காசா மக்கள் செயல்பட வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers