760,000 பவுண்டுகள் மதிப்புடைய தங்க கழிவறையை பயன்படுத்த ஆசை இருக்கிறதா?

Report Print Balamanuvelan in அமெரிக்கா

நியூயார்க்கில் அமைந்துள்ள பிரபல மியூஸியம் ஒன்றில் 760,000 பவுண்டுகள் மதிப்புடைய தங்க கழிவறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

மியூஸியத்துக்கு வருகை தருவோர் இந்த கழிவறையை பயன்படுத்த அனுமதிக்கப்படுவர். இந்த கழிவறை வின்ஸ்டன் சர்ச்சில் பிறந்த அறைக்கு எதிரே நிறுவப்பட உள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க அதிபர் டிரம்ப் மியூஸியத்தில் உள்ள ஓவியம் ஒன்றை இரவலாக கேட்டார்.

அதை வெள்ளை மாளிகையில் வைப்பதற்காக அவர் கேட்டார்.

ஆனால் அந்த ஓவியத்தை தர முடியாது என மறுத்துவிட்ட மியூஸியம், அதற்கு பதிலாக, வேண்டுமானால் இந்த தங்க கழிவறையை வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியிருந்தது.

தற்போது மியூஸியத்துக்கு வருகை தருவோர் யார் வேண்டுமானாலும் இந்த கழிவறையை பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...