பேஸ்புக் நிறுவனர் மார்க் ஷூக்கர்பெர்க் தனது மனைவி இடையூறு இன்றி தூங்குவதற்கு ஒளிரும் மரப்பெட்டி ஒன்றை தயாரித்துள்ளார்.
உலகளவில் பிரபல சமூக வலைதளமான பேஸ்புக்கின் நிறுவனர் மார்க் ஷூக்கர்பெர்க். இவர் தனது மனைவிக்காக ஆச்சரியமான பொருள் ஒன்றை தயாரித்துள்ளார்.
அதாவது இரவில் தன் மனைவி பிரிஸ்சில்லா இடையூறு இன்றி தூங்குவதற்காக, ஒளிரும் தன்மை வாய்ந்த மரப்பெட்டி தான் அது.
இந்த பெட்டியானது காலை 6 மணிக்கும், 7 மணிக்கும் மங்கலான ஒளியை உமிழ்கிறது. ஏனெனில், அப்போதுதான் ஷூக்கர்பெர்க்கின் மகள்கள் தூங்கி எழுந்து கண் விழிப்பார்கள்.

தூங்கும்போது அந்த பெட்டிக்குள் செல்போன் கொண்டு செல்ல முடியாது.
இதுகுறித்து ஷூக்கர்பெர்க் கூறுகையில், இந்த பெட்டி எங்களது நண்பர்கள் மத்தியிலும் பிரபலமாகிவிட்டது. பொது மக்கள் பயன்படுத்தும் வகையில் இதனை பிரபலப்படுத்த உள்ளேன் என தெரிவித்துள்ளார்.