வணிவளாகத்தில் கோர சம்பவம்... ரத்த வெள்ளத்தில் கிடந்த 5 வயது சிறுவன்: அலறித்துடித்த தாயார்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் வணிக வளாகம் ஒன்றில் 5 வயது சிறுவனை மூன்றாவது மாடியில் இருந்து தூக்கி வீசிய இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மினசோட்டா மாகாணத்தில் ப்ளூமிங்டன் பகுதியில் குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

சம்பவத்தின்போது பெண் ஒருவர் தமது 5 வயதான மகனுடம் வணிக வளாகம் ஒன்றிற்கு சென்றுள்ளார்.

அப்போது இளைஞர் ஒருவர் திடீரென்று குறித்த பெண்ணிடம் இருந்து சிறிவனைப் பறித்து, அவர்கள் நின்றிருந்த 3-வது மாடியில் இருந்து தரை தளத்திற்கு தூக்கி வீசியுள்ளார்.

மட்டுமின்றி உடனடியாக அங்கிருந்து அவர் மாயாமகியுள்ளார். சிறுவனின் தாயாரின் அலறல் சத்தம் கேட்டு சம்பவப்பகுதியில் குவிந்த பொதுமக்கள், உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார், ரத்த வெள்ளத்தில் சலனமற்று கிடந்திருந்த சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனிடையே, குறித்த தாயாரிடம் இருந்து தகவலைப் பெற்றுக்கொண்ட பொலிசார், அங்கிருந்த கண்காணிப்பு கெமராவில் பதிவான காட்சிகளையும் பரிசோதித்தப் பின்னர்,

மாயமான இளைஞரை துரத்திச் சென்று கைது செய்துள்ளனர். அந்த இளைஞரின் பெயர் இம்மானுவல் தேஷான்(24) எனவும், கைதான இளைஞருக்கும் அந்த சிறுவனுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், சம்பவம் நடந்த அதே வணிக வளாகத்தில் இதற்கும் முன்னரும் இருமுறை இம்மானுவேல் கலாட்டாவில் ஈடுபட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தற்போது கொலை முயற்சி தொடர்பில் இம்மானுவேல் மீது பொலிசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்